25.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

பிரதமராக ரணிலுக்கு மட்டுமல்ல, எனக்கும் மக்கள் ஆணை இல்லை: நான் எம்.பியாகினேன்; ரணிலுக்கு அதுவுமில்லை: அனுரகுமார பதிலடி!

நான் பிரதமர் பதவியை ஏற்றாலும், ரணில் விக்கிரமசிங்க நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றாலும், அந்த நாற்காலியில் உட்கார உங்களுக்கும் எனக்கும் மக்கள் ஆணை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறைந்த பட்சம் ஆணையுடன் கூடிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியாவது எனக்கு இருக்கின்றது. ரணில் உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் மக்கள் ஆணை கூட இல்லை என்றும் தெரிவித்தார்.

அவ்வாறான ஒருவர் காலவரையறையின்றி பிரதமர் பதவியில் இருப்பது நியாயமா என அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை அனுரகுமாரவினால் 06 மாதங்களில் மீட்டெடுக்க முடியுமென்றால், அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் போதே இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுர, பிரதமர் தனது அறிக்கையை சூழலுக்கு புறம்பாக எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.

நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்றும், 6 மாத காலத்திற்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தான் கூறியதாக குறிப்பிட்டார்.

“நான் சொன்னது என்னவென்றால், ஒரு அமைச்சரவை எங்களால் நியமிக்கப்பட வேண்டும், குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்த பயன்படுத்த வேண்டும். அதன் பின்னர், 06 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து புதிய அரசை அமைக்க வாய்ப்பளிக்க வேண்டும்,” என்றார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப் பிரச்சினைகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் உடனடித் தீர்வை வழங்குவோம் என்று தான் கூறியதாகவும்., அதன் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

“நாம் தேர்தலுக்குச் செல்ல வேண்டியதன் காரணம் இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காகத்தான். எமக்கு நிலையான அரசாங்கம் மட்டுமன்றி நம்பகமான அரசாங்கம் தேவை” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என ஜே.வி.பி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நீண்டகாலப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசாங்கம் பொதுமக்களின் ஆணை பெற்றதாக அமையும் என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை  கேலிக்கூத்தானது என  கடுமையாக சாடினார்.

பொதுமக்களின் கஷ்டங்களை பிரதமரால் ஒருபோதும் தொடர்புபடுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டினார்.

“நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த உலகில் வாழ்ந்தீர்கள். குடிமக்களின் சிரமங்களில் இருந்து உருவாகாத தலைவர் நீங்கள். இந்த நாட்டின் சாதாரண குடிமக்களின் வாழ்க்கைக்கு இணையாக நீங்கள் வாழ்ந்ததில்லை,” என்றார்.

பாராளுமன்றத்தில் உங்களின் அறிக்கைகள் இதனை நிரூபிப்பதாகவும் செய்தி உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக அவ்வாறு செய்கின்றீர்கள் எனவும் தெரிவித்தார்.

“உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு, டீல்கள் போட்டு, எல்லா தரப்பு மக்களையும் தூண்டிவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளீர்கள். உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டங்களால்தான் இந்த நாடு இந்த நிலையை எதிர்கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறான அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நாட்டை நடத்த முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

Leave a Comment