டென்மார்க்கின் மிகப்பெரிய ஷொப்பிங் மால் ஒன்றில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது.
தெற்கு கோபன்ஹேகனில் உள்ள ஃபீல்ட் மாலில் தாக்குதல் நடத்திய 22 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைவர் சோரன் தோமஸ்சென் நோக்கம் தெளிவாக இல்லை மற்றும் அவர் ஒரு “பயங்கரவாத செயலை” நிராகரிக்க முடியாது என்றார்.
நேற்று மாலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற Field கடைத்தொகுதியில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் இருந்ததாக டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடரிக்சன் சுட்டினார்.
“நமது அழகான, பாதுகாப்பான தலைநகர் ஒரே வினாடியில் மாறிவிட்டது” என்று கூறினார் அவர்.
கோபன்ஹேகன் வணிக வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக டென்மார்க் பொலிசார் தெரிவித்தனர்.
“ஃபீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களின் அடையாளம் குறித்து தற்போது எங்களால் வேறு எதுவும் கூற முடியவில்லை” என்று கோபன்ஹேகன் காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
நேற்று பிற்பகலில், துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது குறித்துத் தகவல் பெற்றவுடன், ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அந்தக் கடைத்தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கோப்பன்ஹேகன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடைத்தொகுதியில் இருந்த மக்கள் உதவிக்காக அங்கேயே காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. உள்ளூர் ஊடகக் காணொளிகளில் கடைத்தொகுதிக்குச் சென்றிருந்த சிலர் பயத்தில் வெளியே ஓடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றன.
சம்பவத்தின் தொடர்பில் ஸீலந்து வட்டாரத்தில் தேடல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் வேறு எந்தத் துப்பாக்கிக்காரரும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் மீது இன்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று கோப்பன்ஹேகன் காவல்துறைத் தலைவர் கூறினார்.