50,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தேவையான எரிபொருள் ஏற்றுமதியைப் பெறுவதற்கு மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, எரிபொருளை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
தலா 135,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் ஜூலை 10 மற்றும் 11 ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் 9 மற்றும் 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜூலை 10 ஆம் திகதிக்குள் எரிபொருளை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த விஷயத்தை எளிதாக்குவதற்கு தேவையான ஆவணங்கள் மூன்று புதிய சப்ளையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் இருந்து பெட்ரோனாஸ் மூலம் எரிபொருள் பெறப்படுகிறது என்றும், எனினும் ஆரம்ப இரண்டு ஏற்றுமதிகளுக்கான பணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
மலேசியாவில் இருந்து வரும் ஏற்றுமதி உரிய நேரத்தில் வரத் தவறினால், ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னதாக எரிபொருளைப் பெறுவதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்வதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.




