உக்ரைனின் கிழக்கு மாகாணமான லுஹான்ஸ்கில் உக்ரைனின் வசமுள்ள கடைசி கோட்டையான லைசிசான்ஸ்க்கிற்கான சண்டை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் யுத்த களத்திற்கு வெளியேயுள்ள நகரங்களின் மீதும் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
லைசிசான்ஸ்க்கில் உள்ள நிர்வாக கட்டிடத்தில் ரஷ்ய இராணுவ்தின் கொடி பறப்பதாக, ரஷ்ய சார்பு லுஹான்ஸ்க் மக்கள் இராணுவத்தின் அதிகாரியான Andrei Marochko, சனிக்கிழமையன்று ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நகரம் சுற்றி வளைக்கப்பட்டது என்று. லுஹான்ஸ்க் போராளிகள் லைசிசான்ஸ்க் தெருக்களில் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்த வீடியோக்களை ரஷ்ய ஊடகங்கள் காட்டின.
இருப்பினும் உக்ரைன் இராணுவம் இதனை மறுத்துள்ளது. உக்ரைன் தேசிய காவலர் செய்தித் தொடர்பாளர் ருஸ்லான் முசிச்சுக் உக்ரேனிய தேசிய தொலைக்காட்சிக்கு நகரம் உக்ரேனிய கைகளிலேயே இருப்பதாக கூறினார்.
“இப்போது Lysychansk அருகே கடுமையான போர்கள் உள்ளன, இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, நகரம் சூழப்படவில்லை. உக்ரைனிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது,” என கூறினார்.
Lysychansk மற்றும் Bakhmut பகுதிகளிலும், கார்கிவ் பிராந்தியத்திலும் உள்ள சூழ்நிலைகள் முழு முன்வரிசையிலும் மிகவும் கடினமானவை என்று அவர் கூறினார்.
“எதிரிகளின் இலக்கு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் நிர்வாக எல்லையை அணுகுவதுதான். மேலும், ஸ்லோவியன்ஸ்க் திசையில், எதிரி தாக்குதல் நடவடிக்கைகளை முயற்சிக்கிறார், ”என்று அவர் கூறினார்.
லிசிசான்ஸ்க்கை சுற்றி வளைத்ததாக ரஷ்ய கூறுவது, உக்ரைனியர்களை மனச்சோர்வடையச் செய்யும் மற்றும் ரஷ்ய சார்பு சக்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் கூறப்படும் பொய் என உக்ரைனிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகரான வாடிம் டெனிசென்கோவை மேற்கோள் காட்டி உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்தன.




