எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான நெருக்கடிகளுக்கு தேவையற்ற எரிபொருள் பதுக்கல்களே பிரதான காரணம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, தற்போது வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு மாத்திரம் டோக்கன்களை வழங்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிதாக வரிசையில் சேருபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என்றும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை திட்டமிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்புக்கள் கிடைக்கும் போது போதுமான எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
டோக்கன் கேட்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை ரூ.1500-2000க்கு இடையில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பொதுமக்கள் எரிபொருள் பாவனையை குறைக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மற்றைய தெற்காசிய நாடுகளை விட இலங்கையர்கள் அதிக எரிபொருளை பயன்படுத்துகின்றனர் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.




