கோ கோம் ஜீ.ஏ: யாழ் மாவட்ட செயலகம் அருகே வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

Date:

யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலயைத்தில் எரிபொருள் நிறைவடைந்து விட்டதாக விநியோகத்தை மேற்கொண்ட இராணுவத்தினர் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் வீதியை மறித்து இன்று மாலை 6மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இன்றைய தினம் அத்தியாவசிய சேவையினருக்கும் ஏற்கனவே டோக்கன் விநயோகிக்கப்பட்ட பொதுமக்களுக்குமென இரண்டு வரிசைகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு எரிபொருள் விநியோகம் இன்று காலை முதல் இடம்பெற்றது.

இந்நிலையில் மாலை 5:30 மணியளவில் எரிபொருள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்களும் அத்தியாவசிய சேவைப்பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொதுமக்கள் தாம் மூன்று நாட்களுக்கு மேலாக வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெறுகின்றோம் எனவும் இன்றும் எரிபொருள் இல்லையென்றால் நாம் என்ன செய்வது?ஒழுங்கான பங்கீட்டை ஆரம்பத்திலேயே மேற்க் கொள்ளாத அரசாங்க அதிபர் பதவி விலகவேண்டும், கோ கோம் ஜீஏ என்றவாறாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வீதியின் போக்குவரத்தை சுமூகமான நிலைக்கு கொண்டு வர முயன்றாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்