10 வருடங்கள் வேலை செய்த பெண் கைவரிசை: நகைக்கடையில் திருடப்பட்ட ஒன்றரை கிலோகிராம் தங்க நகைகள் மீட்பு!

Date:

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய தங்கத்தை  பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதாக நால்வரை கைது செய்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போதே இத்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நோர்வூட் நகரில் உள்ள நகைக்கடையொன்றில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதியளவில் ஒரு தொகை நகைக் திருடப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்னொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆறுமாத காலப்பகுதியில் தொடர்ச்சியாக விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வந்த நோர்வூட் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று குறித்த நகைகளை, நோர்வூட், வெஞ்சர் தோட்டத்திலுள்ள சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில், மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் பெண்னொருவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 தங்க நெக்லஸ்கள், 757 தங்க வளைல்கள், 177 தங்கப்பதக்கங்கள், 404 தங்க மோதிரங்கள், 18 தங்க வளையல்கள் உள்ளிட்ட பல நகைகள், 9 தங்க கட்டிகள் என்பன திருடப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்