மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கல்

Date:

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரின் தலையீடு காரணமாக இன்றைய தினம் சனிக்கிழமை (2) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) மன்னார் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் வைத்தியர்கள் இணைந்து எரிபொருள் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது டன் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.

இந்த நிலையில் சுகாதார ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை (2) காலை தொடக்கம் விசேட ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சுகாதார ஊழியர்கள் பதிவுகளின் அடிப்படையில் மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்