Pagetamil
இந்தியா

முதலிரவில் மனைவியை கடித்துக் குதறிய புதுமாப்பிள்ளை கைது!

முதலிரவில் மனைவியை கடித்து துன்புறுத்திய புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (34). கூலித் தொழிலாளி. இவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அன்று ராஜ்குமார் வீட்டில் முதலிரவு நடந்தது. அப்போது, இல்லற கனவுகளுடன் சென்ற புதுப்பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ராஜ்குமார் முதலிரவு அறையில் தனது மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவரது உடலில் பல இடங்களில் கடித்து குதறியுள்ளார். மணப்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.

இதனால் கோபமடைந்த ராஜ்குமார், மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

ராஜ்குமாரின் இந்த வெறித்தனமான செயலால் காயம் அடைந்த அந்த பெண் திருத்துறைப்பூண்டி அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில், முதல் இரவில் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும், கடித்தும், தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

Leave a Comment