பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள படக்லான் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 2015 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் உயிருடன் கைதானவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, பிணை சாத்தியம் இல்லாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது பிரான்சில் வழங்கப்பட்ட அரிதான மற்றும் மிகக் கடுமையான தண்டனையாக கருதப்படுகிறது.
புதனன்று ஒரு நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ஜீன்-லூயிஸ் பெரிஸ் வழங்கினார்.
பிரதான சந்தேக நபரும், தப்பிப்பிழைத்த ஒரேயொரு தாக்குதலாளியுமான 32 வயதான சலா அப்தெஸ்லாம், 9 மாத விசாரணையின் முடிவில் “பயங்கரவாத” நிறுவனத்துடன் தொடர்புடைய கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றங்களில் குற்றவாளியாக காணப்பட்டார்.
அப்தெஸ்லாம் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைக்காமலிருக்க கடைசி நிமிடத்தில் முடிவு செய்ததாக, விசாரணையில் கூறினார்.
வழக்கில் சாட்சியமளித்த அப்தெஸ்லாம்,
”தற்கொலை அங்கியை அணிந்து கொண்டு, ஒரு மூலையில் உள்ள கஃபேவிற்குள் நுழைந்தேன். பெயர் அல்லது சரியான இடம் நினைவில் இல்லை. முன்னதாக நானும் அசகோதரர் பிரஹிமும் அதை ஒரு இலக்காகத் தேர்ந்தெடுத்தோம். அங்கு அமர்ந்து குடிக்க ஒர்டர் செய்தேன்.
மதுக்கடை நிரம்பியிருந்தது. திட்டம் எளிமையானது மற்றும் பயங்கரமானது. முடிந்தவரை பலரைக் கொன்று, ஊனப்படுத்துவது.
நான் சுற்றிப் பார்த்தேன். அந்த இடம் இளைஞர்களால் நிரம்பியிருந்தது, மிகவும் இளைஞர்கள். அவர்கள் சிரித்து, நடனமாடுகிறார்கள். என்னால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் என்னை விட இளையவர்கள். நான் மனிதநேயத்தின் மூலம் தற்கொலை அங்கியை வெடிக்க வைப்பதில்லையென முடிவு செய்தேன்.
நான் பெல்ஜியத்திற்குத் திரும்பியதும், தாக்குதல் தளபதிகளிடம் ஜாக்கெட் வெடிக்கத் தவறிவிட்டதாகச் சொன்னேன்.” என்றார்.
ஆனால், விசாரணைகளின் அடிப்படையில், நீதிமன்றம் வேறுவிதமாக தீர்ப்பளித்தது.
“உடலில் கட்டியிருந்த வெடிக்கும் ஆடை பழுதடைந்ததாக நீதிமன்றம் கருதியது,” என்று நீதிபதி பெரிஸ் கூறினார்.
“பயங்கரவாத வலையமைப்பில் உறுப்பினராக இருந்ததற்காக அப்தெஸ்லாம் குற்றவாளி” என்றும் நீதிபதி கூறினார்.
விசாரணையின் போது, அப்தெஸ்லாம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார் மற்றும் நீதிபதிகளிடம் தனது “தவறுகளை” மன்னிக்குமாறு கெஞ்சினார்.
”தாக்குதலை திட்டமிட்ட அபாவூத் என்பவரே, அவர் பகுதி பகுதியாக ஒவ்வொருவருக்கும் பணிகளை கொடுத்தார். நான் தாக்குதல் நடத்த சென்ற கஃபேவை தவிர வேறு இடங்களில் தாக்கதல் நடப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அபாவூத் அப்படித்தான் திட்டமிடுவார். தாக்கதலின் பின் சிரியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றேன்” என்றார்.
2015ஆம் ஆண்டு Bataclan இசை மண்டபத்தைத் தவிர, ஆறு பார்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் நீண்ட தாக்குதலை நடத்தினார்கள்.
13 ஆம் நூற்றாண்டு நீதி அரண்மனையில் கடந்த 9 மாதங்களாக வழக்கு விசாரணை நடந்து வந்தது.
வழக்கில் மற்ற பத்தொன்பது பிரதிவாதிகள் பெரும்பாலும் தளவாடங்கள் அல்லது போக்குவரத்துக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டனர். மார்ச் 2016 இல் பிரஸ்ஸல்ஸில் நடந்த கொடிய தாக்குதல்களில் ஒருவருக்கு நேரடிப் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலுக்கு ISIL (ISIS) குழுவால் உரிமை கோரப்பட்டது. அனைத்து 19 பிரதிவாதிகளும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டனர்.