ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கமாட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான புட்டினின் படையெடுப்பு நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையின் வெளிப்பாடு என்று ஜெர்மானிய செய்தி நிறுவனமான ZDF யிடம் ஜோன்சன் தெரிவித்தார்.
உலகிலுள்ள பெண்களுக்கு மேம்பட்ட கல்வி தேவை என்றும் அதிகமான பெண்கள் அதிகாரப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“போர் முடியவேண்டும் என்று தான் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அது தொடர்பான ஒப்பந்தம் ஏதும் இல்லை.” என்றார் அவர்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்தால், உக்ரைனின் நிலையை பலப்படுத்த மேற்கத்திய நாடுகள் அதற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜோன்சன் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1