மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கட்டாரில் அந்த நாட்டு எரிசக்தி அமைச்சரை கட்டாரில் சந்தித்துள்ளார்.
கத்தார் எரிசக்திஅமைச்சர் Saad Sherida Al-Kaabi உடன் கலந்துரையாடினார்.
கத்தார் எரிசக்தி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள், எல்பிஜி மற்றும் எல்என்ஜி வழங்குவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
அமைச்சர் விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் அஹமட் நசீர் ஆகியோர், எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக கட்டார் சென்றுள்ளனர்.
இதேவேளை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த டுபாய் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார்.
அமைச்சர் பிரேமஜயந்த, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க மற்றும் அதிகாரிகள் பலர் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மொஸ்கோவிற்குச் சென்று இலங்கையின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.