ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் இரண்டு மகள்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதுடைய மகள் காவிந்தி ரணசிங்கவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் சரியாக கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகளால் தீ அணைக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
47 வயதான தந்தை உடனடியாக உயிரிழந்தார். 6 வயதான மகள் பொரளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
35 வயதான தாயும், 19 வயதான மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் நடந்த போது, கீழ்த்தளத்திலுள்ள மற்றொரு அறையில் உயிரிழந்தவரின் வயோதிப தாயார் தங்கியிருந்துள்ளார். அவருக்கு நடந்த சம்பவங்கள் தெரியாமல் உறக்கத்தில் இருந்துள்ளார்.