இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள், பொலிசார் பலவந்தமாக எரிபொருள் நிரப்புகிறார்கள் என எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (27) மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது. இதில் பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபனம், இராணுவம், பொலிஸ் தரப்பு அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட, முகமாலை எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரே இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக சுமத்தினார்.
பெற்றோல் கையிருப்பு தீர்ந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளிற்காக மட்டும் ஒரு கொள்கலனில் குறிப்பிட்டளவு எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ புலனாய்வாளர்களும், பொலிஸ் புலனாய்வாளர்களும், பொலிசாரும் வந்து பலவந்தப்படுத்தி பெற்றோல் நிரப்பி செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதையடுத்து, இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்ததுடன், இதுபோல இனி நடக்காது எனவும், இவ்வாறு நடந்து கொள்ளும் பாதுகாப்பு தரப்பினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தனர்.