நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமானதாக இருக்கும் எனவும், பயணத்தை மட்டுப்படுத்துமாறும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களை வலியுறுத்தி ஜூன் 7ஆம் திகதி பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த மூன்று வாரங்கள் நாளையுடன் முடிவடைவதாகக் கூறிய பாலித, நாட்டில் எரிபொருளோ, எரிவாயுவோ இல்லை என்றும், நாளைய தினம் நாடு அசைய முடியாத நிலைமைக்கு வரும் என்றும் கூறினார்.
ஜூன் 8 ஆம் திகதி 5,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் தொன் பெட்ரோல் இறக்கமதி செய்யப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் 3,500 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 1,500 மெட்ரிக் தொன் பெட்ரோலே கொண்டு வரப்பட்டது
நாட்டின் தேவை 6,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
11 மற்றும் 12 ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல் வரும் என்று ஜூன் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.ஆனால் எரிபொருள் கப்பல்கள் இன்னும் இலங்கைக்கு வரவில்லை என்றார்.