மறுஅறிவித்தல் வரும் வரை, அன்றாட சேவைகளுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்க, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன இந்த சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
நிறுவனங்கள் செயலிழக்காமல் தொடர தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இயன்றவரை, ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய நிறுவனங்களின் தலைவர்கள் தூண்ட வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1