1,900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆமையும் அதன் முட்டையும் இத்தாலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான பொம்பேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கி.பி 62ஆம் ஆண்டு அந்த நகரம் முதலில் பூகம்பத்தால் இடிந்தது. கர்ப்பிணி ஆமை, முட்டையிட வீடொன்றிற்குள் புகலிடம் தேடிச் சென்றிருக்கலாமென நம்பப்படுகிறது. பூகம்ப இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளது.
17 ஆண்டுகளின் பின்னர், கி.பி. 79ஆம் ஆண்டில் வெடித்த Vesuvius எரிமலையின் சாம்பலுக்குள் பொம்பே நகரமே புதையுண்டது. அந்த சாம்பல் மேட்டிற்குள்ளிருந்து பல தொல்லியல் சின்னங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆமை, ஒரு கிடங்கின் தரைக்கு அடியில் காணப்பட்டது.
ஆமை கண்டுபிடிக்கப்பட்ட இடம் முதன்முதலில் ஒரு வசதியான வீடாக இருந்தது. பூகம்பத்தால் அழிந்துள்ளது.
14 சென்டிமீட்டர் நீளமான (5.5 அங்குல நீளம்) ஹெர்மனின் வகை ஆமையின் எச்சமே கண்டறிப்பட்டது. பொம்பேயில் இதற்கு முன்னரும் பண்டைய ஆமை எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.