எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் எரிபொருளை இறக்குவதற்கும் அது தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கும் பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை என தொழிற்சங்கவாதி ஆனந்த பாலித குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாலித, எதிர்வரும் நாட்களில் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என்றார்.
38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றுக்கொள்வதற்கு ஊழியர்கள் தயாராக இல்லாத நிலையில், ஏற்றுமதி தாமதமானது என்றார்.
இறக்குமதி செய்யப்பட்ட இந்த எரிபொருள் ஏழு நாட்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய பாலித, மாதாந்தம் நான்கு இறக்குமதிகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சரின் கூற்றுப்படி, டீசல் நேற்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொள்வனவிற்கான ஓர்டர்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1