எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் ஜூலை முதலாம் திகதி வரையான வாரத்தில் கீழ்க்கண்டவாறு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2022/06/20 முதல் 2022/06/24 வரை, கிராமப்புற பாடசாலைகளில் பாடசாலைகள் இடம்பெற்ற விதத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள் இல்லாமல் வழக்கம் போல் பராமரிக்க வேண்டும்.
இந்தப் பாடசாலைகளில் போக்குவரத்து சிரமம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொருத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.
கடந்த வாரம் நகர்ப்புறங்களில் நடைபெறாத பாடசாலைகளில் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடத்தப்பட வேண்டும்.
இப்பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு.
மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.