ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Date:

நடிகர் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் ஆகியோர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடன இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக உருவெடுத்து, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது இவரது நடிப்பில் ‘ருத்ரன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘Evil is not Born. It is Created’ என்ற டேக் லைனை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாங்கி நிற்கிறது. இந்தப் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் அதிரடி சண்டைக் காட்சியில் மிரட்டுவதை போல உள்ளது.

எதிர்வரும் கிறிஸ்துமஸ் திருநாளுக்கு இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்