எஸ்.பி.பி மகனுடன் சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம்?

Date:

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கும், சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் உடன் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2006இல் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாக 4 ஆண்டுகளில், 2010 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிரபல பாடகரான மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இரண்டு தரப்பும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்