24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

அத்தியாவசிய சேவைக்கே எரிபொருள்; என்னை திருப்பி அனுப்பிவிட்டு தனியார் வங்கி ஊழியர்களிற்கு வழங்கினார்கள்: வைத்தியர் குற்றச்சாட்டு

அத்தியாவசிய சேவையினருக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம், உங்களிற்கு வழங்க மாட்டோம் என தெரிவித்து, வைத்தியர் ஒருவரை திருப்பி அனுப்பி விட்டு, தனியார் வங்கி ஊழியர்களிற்கு பெற்றோல் நிரப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வடமராட்சி, நெல்லியடி நகரில் உள்ள  கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக வைத்தியர் குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாண சித்த வைத்தியசாலையின், மருத்துவ அத்தியட்சகரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து  வைத்தியர் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த போது, “இன்று அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் நிரப்பப்படுவதாக கிடைத்த தகவலின் பிரகாரம் எனது மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப சென்றேன். எனது மோட்டார் சைக்கிளில் மருத்துவர் என்ற அடையாளம் ஒட்டப்பட்டிருந்தது. வைத்தியர் என்பதை குறிப்பிட்டு, எரிபொருள் நிரப்ப வேண்டுமென தெரிவித்தேன்.

அங்கு நின்ற கரவெட்டி பிரதேச செயலாளர், அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு எனக்கு கூறினார்.

மருத்துவர் என்பதை குறிப்பிட்டு, அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு எரிபொருள் இல்லையா என கேள்வியெழுப்பினேன். பிரதேச செயலாளர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தனியார் வங்கி ஊழியர்களிற்கு பெற்றோல் நிரப்பப்படுவதாகவும், நாளை அவர்களின் சம்பள நாள் என்பதால் எரிபொருள் நிரப்புவதாகவும் சொல்லப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாவிற்கு பெற்றோல் நிரப்பப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் சென்று, வைத்தியர் என குறிப்பிட்டு, எரிபொருள் நிரப்ப வேண்டுமென்றேன். அவர் தொலைபேசியில் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல, எரிபொருள் நிரப்ப வேண்டாமென பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதையடுத்து நான் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் என தெரிவித்தார்.

கரவெட்டி பிரதேச செயலாளரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவிய போது, எரிபொருள் நிரப்புமிடத்தில் சர்ச்சையொன்று தோன்றியதை ஏற்றுக்கொண்டார். எனினும், அவர் வைத்தியர் என்ற அடையாளத்தை தன்னிடம் வெளிப்படுத்தவில்லையென்றார்.

கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள எரிபெருள் நிரப்பு நிலையங்களில் முதலாவது வைத்தியர்களிற்கும், இரண்டாவது பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கும் முன்னுரிமையளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment