இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதென நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குற்றம்சுமத்தியுள்ள குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அவ்வாறானதொரு தீர்மானம் ஏகமதாக நிறைவேற்றப்பாடவில்லை என்றும் வெளியான குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதெனவும் தெரிவித்துள்ளனர்.
முன்பதாக இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் உண்மையில் இனப்படுகொலைதான் என்பதை 22ஆம் திகதி நடந்த நல்லூர் பிரதேச சபை அமர்வில், அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே குறித்த தீர்மானமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இந்த தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இவ்விடயத்தில் தமக்கும் எதுவித தொடர்பும் கிடையாதெனவும் அவ்வாறானதொரு உண்மைக்கு புறம்பானதென செய்தியை தாம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.