எரிபொருள் வரிசையில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றவர் விபத்தில் பலி

Date:

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர்  எரிபொருள் பெறுவதற்காக தனது அறுவடை இயந்திரத்தினை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி சென்றுகொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.

ஓமந்தையில் இருந்து பறன்நட்டகல் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவரை அதே திசையில் பயணித்த கார் மோதியதில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபர் பலியானதுடன் மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து குறித்த காரினை கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஓமுந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்