28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனில் முடங்கியுள்ள தானியங்களை கருங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்ய பேச்சு: ஐ.நா செயலாளரின் பங்கேற்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரைன் பேச்சுக்கு திட்டம்!

கருங்கடல் துறைமுகங்களில் தற்போது சிக்கியுள்ள தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு வரும் வாரங்களில் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்த துருக்கி திட்டமிட்டுள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்தான்புல்லில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னதாக, கருங்கடலில் சாத்தியமான பாதுகாப்பான கடல் வழித்தடம் பற்றி விவாதிக்க துருக்கிய பாதுகாப்பு பிரதிநிதிகள் இந்த வாரம் மொஸ்கோவிற்கு விஜயம் செய்வார்கள்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவை மேற்கோள் காட்டி, துருக்கிய இராணுவக் குழுவின் பேச்சுவார்த்தைக்கான திட்டங்களை ரஷ்யாவின் TASS நிறுவனமும் உறுதிப்படுத்தியது.

மில்லியன் கணக்கான தொன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தற்போது உக்ரைனிய துறைமுகங்களில் சிக்கியுள்ளன, அவை ரஷ்யப் படைகளால் தடுக்கப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் கப்பல்கள் கருங்கடலில் விதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளின் ஆபத்தை எதிர்கொள்கின்றன.

துருக்கி, உக்ரைன், ரஷ்யா மற்றும் ஐநா இடையே நான்கு வழி சந்திப்பு வரும் வாரங்களில் இஸ்தான்புல்லில் நடைபெறும். இதில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரும் பங்கேற்பர்.

கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவிலிருந்து கெய்வின் மேற்பார்வையின் கீழ் மூன்று வழித்தடங்களை உருவாக்கும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உக்ரைனிய மற்றும் ரஷ்ய உணவுப் பொருட்கள் அங்கிருந்து அனுப்பப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் துறைமுகத்தில் இருந்து 30 முதல் 35 மில்லியன் தொன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

துருக்கி, ரஷ்ய ஊடகங்களில் வெளியான திட்டங்களைப் பற்றி கேட்டதற்கு, ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “இந்தப் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன” என்று மேலும் விவரிக்காமல் கூறினார்.

துருக்கிய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாதுகாப்பான வழித்தடங்களை அமைக்கும் வகையில் ஏற்றுமதியை எளிதாக்கும் திட்டத்தை ஐ.நா சமர்ப்பித்துள்ளது. அந்தத் திட்டத்திற்கு நீண்ட மற்றும் சிக்கலான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தேவைப்படாது என துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு கடந்த வாரம் தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளாமல், நிலம் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிகளைத் தேடும் உக்ரைனில் இருந்து எச்சரிக்கையான பதிலைப் பெற்றது.

இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை அங்காராவில் சந்தித்து, துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இந்த பிரச்சினையைப் பற்றி விவாதித்தார்.

ஜனாதிபதி எர்டோகன் திங்களன்று ஐநா செயலாளர் குட்டெரெஸுடன் தானிய ஏற்றுமதி குறித்து விவாதித்தார். துருக்கி “உலகளாவிய உணவு நெருக்கடியைத் தடுக்கும் முயற்சியில் கருங்கடல் வழியாக உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்கிறது” என்று எர்டோகனின் அலுவலகம் செவ்வாயன்று கூறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

Leave a Comment