29.7 C
Jaffna
June 28, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானை உலுக்கிய நிலநடுக்கம்: 1,000 இற்கும் அதிகமானவர்கள் பலி!

புதன்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொலைதூர மலை கிராமங்களில் இருந்து மரண எண்ணிக்கை தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகள் இடிந்து தரைமட்டமாகி, போர்வைகளில் அடுக்கப்பட்டுள்ள உடல்களின் புகைப்படங்களை ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் காண்பித்தன.

காயமடைந்தவர்களை மீட்கவும், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஹெலிnகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி சலாஹுதீன் அயூபி தெரிவித்தார்.

“சில கிராமங்கள் மலைப் பகுதியில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் உள்ளதால், மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் விவரங்கள் சேகரிக்க சிறிது காலம் பிடிக்கும்,” என்றார்.

புதனன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிகப் பெரிய உயிரிழப்பு ஆகும். இது தென்கிழக்கு நகரமான கோஸ்டிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில், பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGC) தெரிவித்துள்ளது.

1,000 பேர் இறந்துள்ளனர் மற்றும் 600 பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றனர்.

“1,000 பேர் இறந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர், மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும், பல குடும்பங்கள் இழந்துள்ளன. காயமடைந்தவர்கள் காபூல் மற்றும் கார்டெஸுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,” என்று பக்திக்காவின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் முகமது அமின் ஹோசைஃபா தெரிவித்தார்.

உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணமான பக்திகாவில் பதிவாகின, அங்கு 255 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோஸ்ட் மாகாணத்தில், 25 பேர் இறந்தனர் மற்றும் 90 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆளும் தலிபான் கட்சியின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா தனது இரங்கலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்டில் நாட்டைக் கைப்பற்றிய தலிபான்களுக்கு, மீட்பு நடவடிக்கை ஒரு பெரிய சோதனை களமாக அமைந்துள்ளது. பொருளாதாரத் தடைகள் காரணமாக சர்வதேச உதவிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுமார் 119 மில்லியன் மக்கள் நடுக்கத்தை உணர்ந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவித்தன.

பூகம்பத்தின் அளவை 6.1 ஆக EMSC  கணித்தது. ஆனால் USGC அது 5.9 என்று கூறியது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் பல பிராந்தியங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதில் 11 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இதில்  நெடுஞ்சாலைகளும் சேதமாகின. இது மீட்பு பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு தசாப்த காலப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான சர்வதேசப் படைகள் பின்வாங்கியதால், தலிபான்கள் பொறுப்பேற்றதில் இருந்து, ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மனிதாபிமான உதவி தொடர்கிறது.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா.வின் அலுவலகம் (UNOCHA) ஆப்கானிஸ்தான் மனிதாபிமான அமைப்புகளை மீட்பு முயற்சிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு குழுக்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியது.

சர்வதேச உதவியை தலிபான்கள் வரவேற்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அண்டை நாடான பாகிஸ்தான் உதவியை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியது.

2015 ஆம் ஆண்டில், தொலைதூர ஆப்கானிஸ்தான் வடகிழக்கில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது, ஆப்கானிஸ்தான் மற்றும் அருகிலுள்ள வடக்கு பாகிஸ்தானில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி மாதம், மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அம்பு, வில் தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்!

Pagetamil

ஆணையாளரின் அறிக்கையை எப்படி?… எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றப் போகிறீர்கள்?: ஐ.நாவில் அமெரிக்கா அழுத்தம்!

Pagetamil

இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!