அவுஸ்திரேலியாவின் உள்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கிளேர் ஓ நீல் இலங்கைக்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் அமைச்சர் ஓ’நீல் கலந்துரையாடவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடந்த வார தொடக்கத்தில் அமைச்சர் பீரிஸ் மற்றும் அமைச்சர் ஓ’நீல் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இந்த விஜயம் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டியே அமைந்துள்ளது.
அவுஸ்திரேலியா மிகவும் கடினமான பொருளாதார காலங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கைக்கு எவ்வாறு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் உதவுவது மற்றும் ஆட்கடத்தல் உட்பட நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான ஈடுபாட்டை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஓ நீல் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் நிதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதாக உணர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.