25.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

வீதியோரம் பெற்றோல் விநியோகம்: 3 பவுசர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து!

மூன்று எரிபொருள் பவுசர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் CEYPETCO மற்றும் Lanka IOC ஆகியவற்றால் இந்த இடைநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நெறிமுறையற்ற எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா இந்தியன் ஓயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சட்டவிரோத எரிபொருள் பரிமாற்றம் அம்பலமனது.

கொழும்பு மரைன் டிரைவில் லங்கா ஐஓசி எரிபொருள் பவுசரிலிருந்து, கார் ஒன்றுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. கான்களில் வழங்கப்பட்ட எரிபொருள் காரில் ஏற்றப்பட்டது.

அந்த வாகனத்தில் ஒரு பெண் வந்திருந்தார். வாகனத்தில் மருத்துவர்களின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இந்த பவுசர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

Leave a Comment