24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை: இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு!

முல்லைத்தீவு, விசுவமடு எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து. இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வருமென எதிர்பார்த்து, கடந்த 2 நாட்களாக பெருமளவு மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எனினும், இன்றும் எரிபொருள் வரவில்லை.

இதையடுத்து, பொதுமக்கள் இன்று கொந்தளிப்பாகினர்.

அமைதியின்மையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அத்துடன், புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

UPDATE – காட்டிற்குள் உல்லாசமாக சென்ற எட்டு பேர் கைது

east tamil

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை 33வது இடத்தில்

east tamil

Leave a Comment