கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்திலிருந்து 11ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அச்சிறுமி காணாமல் போனமை தொடர்பில், ஊடகங்களில் வெளியான செய்தியை அவதானித்த வர்த்தகர் ஒருவர், சிறுமி பஸ் தரிப்பிடத்தில் இருப்பதை கண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
சிறுமி கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர் கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டள்ளார்.
நாளை, நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்றும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியைத் தேடிச் சென்றதாகவும், செல்லும் வழியில் தனது தொலைபேசி செயலிழந்ததால் நண்பியுடன் தொடர்புகொள்ள முடியாமல், பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.