வவுனியா நகரில் அடி காயங்களுடன் ஆணின் சடலம்!

Date:

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம்  நேற்று (11) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடிக காயங்கள் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலரிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் பொதி சுமக்கும் தொழில் புரிபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்