மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இடம்பெற்றது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.
யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றது.
சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் பாலின வேறுபாடின்றி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
2
+1
+1
+1