கணவன், பிள்ளைகள் பிரித்தானியாவில்: வவுனியா கிணற்றிலிருந்து மனைவியின் சடலம் மீட்பு!

Date:

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (10) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அங்கிருந்து வந்து, வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்