41 சேம் சைட் கோல் அடித்த அணிக்கு வாழ்நாள் தடை!

Date:

தென்னாப்பிரிக்காவின் நான்காவது பிரிவு கால்ப்பந்து அணியொன்று, ஆட்ட நிர்ணய சதியாக  41 சேம் சைட் கோல்களை அடித்தது. அந்த அணி வாழ்நாள் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்தியாசி அணி கடந்த மாதம் Nsami மைட்டி பேர்ட்ஸுக்கு எதிராக 59-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மைட்டி பேர்ட்ஸ் நான்கு வீரர்களிற்கு சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டன.

போட்டி அணியொன்று சம்பியன் பட்டத்தை வெல்வதை தடுப்பதற்காக இரண்டு அணிகளும் இணைந்து ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த தொடரில் டேஞ்சரஸ் டைகர்ஸ் அணிக்கும், மத்தியாசி அணிக்குமிடையில் 22 கோல் வித்தியாசம் காணப்பட்டது.

அதிக கோல் பெற்ற அணியாக மாற, மைட்டி பேர்ட்ஸ் அணியுடன் சதியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இதனால் ஆட்டம் தொடங்கிய பின்னர், மைட்டி பேர்ட்ஸ் வீரர்கள் 41 சேம் சைட் கோல்கள் அடித்தனர். 5ஆம் இலக்க வீரர் 10 கோல்களும், 10 இலக்க வீரர் 20 கோல்களும் அடித்துள்ளனர்.

ஆட்டத்தில் தவறிழைத்து 4 வீரர்கள் சிவப்பு அட்டை பெற்றனர்.

இந்த செயற்பாடு விளையாட்டின் மீதான ரசிகர்களின் அபிமானத்தை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சித்துள்ள தென்னாபிரிக்க கால்பந்து சம்மேளனம், மைட்டி ஸ்போர்ட்ஸ் அணிக்கு வாழ்நாள் தடைவிதித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...

ஈரான் ஜனாதிபதி பதவி விலகுகிறாரா?: உண்மை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஈரான்...

தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்