அதிகார பேராசையால் செல்லாக்காசுகளாக மாறிய ராஜபக்சக்கள்: சுட்டிக்காட்டும் அனுர!

Date:

எல்லையற்ற அதிகாரத்திற்கான பசியின் காரணமாக ராஜபக்சக்கள் இலங்கையில் செல்வாக்கற்றவர்களாக மாறியதாக ஜேவிபி கூறுகிறது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்து குடும்பத்தை மையமாக கொண்ட அரசாங்கத்தை உருவாக்கும் ராஜபக்சக்களின் மனப்போக்கு அவர்களின் இறுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றார்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை புறக்கணித்து, ராஜபக்சக்களின் ஆட்சி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டதாக அனுரகுமார நினைவு கூர்ந்தார்.

அத்தகைய ஆட்சி இருந்தபோதிலும், உண்மையான அதிகாரம் எங்குள்ளது என்பதை கடந்த சில நாட்களாக மக்கள், அரசாங்கத்திற்கு காட்டுவதாக சுட்டிக்காட்டினார்.

அடிமைகளைப் போல் நடத்தப்படுவதாலும், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாலும் பொதுமக்கள் சோர்வடைந்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், அதிகாரத்தின் மீதான பிடி பனி மலை போல் உருகியது, குடும்ப உறுப்பினர்கள் இடம்பெயர்ந்தனர், மக்கள் பார்வையில் இருந்து விலகினர்.  ராஜபக்ச குடும்பத்தினர் நினைத்திருந்த அதிகாரத்தை விட மக்கள் சக்தி பலமாக இருப்பதால் பசில் ராஜபக்ஷ பதவி விலக நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்