திருப்பதிக்குள் நயன்தாரா காலணியுடன் நுழைந்ததால் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
இது நிலையில் திருமணத்திற்கு முன் இரண்டு முறை திருப்பதி மலைக்கு வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று ஏழுமலையானின் கல்யாணம் உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் திருப்பதி மலைக்கு வந்தனர்.
ஏழுமலையான் கோவில் முன் இருக்கும் விஐபி மற்றும் செலிபரிட்டீஸ் கார் பார்க்கிங் பகுதிக்கு காரில் வந்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் வேறு ஒரு வழியில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு சமீபமாக வந்து அங்கிருந்து கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ள கோவிலுக்குள் சென்றனர்.
#WikkyNayan From #Tirupati #Nayanthara #VigneshShivan #Nayantharawedding #NayantharaMarriage pic.twitter.com/Y4SlK813yf
— NAYANTHARA FC KERALA (@NayantharaFCK) June 10, 2022
நயன்தாரா கோயில் வளாகத்திற்குள் காலணியுடன் செல்லும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
They were soo interested in conducting the wedding in Tirupathi.. now have visited the temple soon after wedding 🙏 ❤️
Uff! Such a believer 🙌 #Ladysuperstar #Nayanthara #Nayantharawedding pic.twitter.com/zAhNHp5hdz
— Theladysuperstarclub (@Nayantharian) June 10, 2022
புனிதமான பகுதிக்குள் நயன்தாரா காலணியுடன் சென்றதற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.