பிரிட்டனில் புதைபடிவ வேட்டைக்காரர்களில் ஒருவரால் ஐல் ஓஃப் வைட் தீவில் ஒரு மாபெரும் முதலை முகம் கொண்ட இறைச்சி உண்ணும் டைனோசரின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் வியாழக்கிழமை (9) தெரிவித்தனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய வேட்டையாடும் டைனோசராகும். இது சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தில் பிரிட்டன் பகுதியில் வாழ்ந்துள்ளது.
இரண்டு கால்கள் கொண்ட ஸ்பினோசவுரிஸ் ( Spinosaurs) வகை டைனோசரின் பெரும்பாலான எலும்புகள் உள்ளூர் சேகரிப்பாளர் நிக் சேஸால் கண்டுபிடிக்கப்பட்டன.
எலும்புக்கூட்டின் பாகங்கள் முதுகு, இடுப்பு மற்றும் வால் எலும்புகள், சில மூட்டுத் துண்டுகள் மீட்கப்பட்டக. ஆனால் மண்டை ஓடு அல்லது பற்கள் எதுவும் இல்லை. PeerJ Life & Environment இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் “White Rock Spinosaurid” என்று அழைக்கப்படும் சில எலும்புகளை அடையாளம் காண பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
10 மீட்டர் (33 அடி) நீளத்திற்கு மேலுள்ள இது ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இறைச்சி உண்ணும் டைனோசராகும்.
இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டறியப்பட்ட இந்த டைனோசருக்கு இன்னும் அறிவியல் பெயரை வழங்கவில்லை, ஏனெனில் எச்சங்கள் முழுமையடையவில்லை. இருப்பினும், அவர்கள் ராட்சத டைனோசரை White Rock Spinosaurid என்று அழைக்கிறார்கள்.