ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மின்சாரசபை திருத்த சட்டத்திற்கு எதிராக நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதனால் இன்று அதிகாலை 5.10 மணி முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நள்ளிரவு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பொறியியலாளர்கள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்தது.
எனினும், இன்று காலை 6 மணி வரை மின்சார விநியோகம் சீரடையவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1