சிங்கராஜா வனப்பகுதியில் ஏலக்காய் பறிக்கச் சென்ற பெண் ஒருவரை ஐந்து நாட்களாக காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ரக்வான சூரியகந்த பிஜி தோட்டத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் நேற்று (08) நண்பகல் வரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குருவிட்ட இராணுவ முகாமின் படையினரும் குறித்த பெண்ணைத் தேடி சிங்கராஜா காட்டில் ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவரைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்காததால், தெனியாயவில் இருந்து சிங்கராஜா காட்டுக்குள் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குழுவொன்று நுழைந்து தேடுதலை ஆரம்பித்துள்ளது.
எஸ்.மனோரஞ்சனி என்ற பெண்ணே காணாமல் போயுள்ளார்.
முன்னதாக ஏலக்காய் உடைக்கச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயிருந்த நிலையில், பின்னர் தெனியாயவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1