இன்று வழமை போல எரிபொருள் விநியோகம்!

Date:

தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நிராகரித்துள்ளது.

சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தநாயக்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தினசரி அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் எரிபொருள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருளை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறும், தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் சந்தநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை,   5,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 3,500 மெட்ரிக் தொன் டீசல் வழமை போன்று இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுவது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தினசரி 3,200 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் பெட்ரோல் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே வரிசைகள் காணப்படுகின்றன.

இந்திய கடன் வசதியின் கீழ் ஓர்டர் செய்யப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி ஜூன் 16 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நாளை மற்றும் ஜூன் 10 ஆம் திகதி வரவிருக்கும் மேலும் இரண்டு ஏற்றுமதிகளுக்கான ஓர்டர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

இதற்கான நிதியை இலங்கை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (2)...

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா...

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்