31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

மேலை நாடுகளில் எரிவாயு பயன்படுத்தும் பெண்களின் ஆயுளை விட, இலங்கையில் விறகு அடுப்பை பயன்படுத்தும் பெண்களின் ஆயுள் அதிகம்: சரத் வீரசேகர

நவீன மற்றும் சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களை விட விறகு பயன்படுத்தும் இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (7) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நவீன, சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் உள்ள மக்களின் ஆயுட்காலம் சுமார் 80 வருடங்கள் எனவும், விறகு பயன்படுத்தும் இலங்கைப் பெண்ணின் ஆயுட்காலம் 80.1 வருடங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர அதன் வீழ்ச்சிக்காக அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நவீன சுத்தமான எரிசக்தி எரிபொருளைப் பயன்படுத்தும் பணக்கார நாடுகளில் உள்ளவர்களின் ஆயுட்காலம் 80 மற்றும் 85 ஆண்டுகள். ஆனால் இலங்கையில் எரிவாயு வாங்க முடியாத காலத்தில், விறகை பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்களாகும். அதாவது இலங்கையில் சில குறிகாட்டிகள் தெற்காசியாவில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன. விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர வீழ்ச்சிக்காக அல்ல என்பதை இது காட்டுகிறது.

எனவே விறகு விநியோகம் மற்றும் பாவனை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாட்டின் இறையாண்மை மற்றும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு விறகுகளின் பயன்பாடு ஒரு முக்கிய காரணியாகும்.

இன்று விறகின் பயன்பாடு ஒரு பழங்குடி செயல்முறையாக குறைத்து மதிப்பிடப்பட்டாலும், 1800 கள் வரை, விறகு உலகின் முக்கிய ஆற்றல் மூலமாக இருந்தது. 2020இல் உலகின் மொத்த ஆற்றல் நுகர்வில் 10% விறகிலிருந்து கிடைத்தது” என்றார்.

இதையும் படியுங்கள்

யாழ் முன்னாள் எம்.பியொருவர் விரைவில் கைதாவார்: சுமந்திரன் ஆருடம்!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!