முல்லைத்தீவு அளம்பிலில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (6) இரவு இந்த சம்பவம் நடந்தது.
செம்மலையை சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் அளம்பில் பகுதியில் வீட்டில் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற இருவர், அந்த நபரை வீட்டிற்கு வெளியில் அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தலையில் படுகாயமடைந்த குறித்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் தந்தையும், இவருமே வசித்து வந்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




