மட்டக்களப்பில் பட்டினியால் ஒருவர் உயிரிழப்பு!

Date:

வாழைச்சேனை பொது மைதானத்திற்கு பின்னால் உள்ள ஒரு கட்டத்திற்கு அருகில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.

செங்கலடி, புதிய வீதி கொம்மாதுறையைச் சேர்ந்ந பிள்ளையான் கணேசமூர்த்தி (69) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறி சுமார் ஆறு நாட்கள் உணவின்றி மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்துள்ள நிலையில் பசியின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் ஒட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சி.நியாஸின் உதவியுடன் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் குடும்பம் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ந.குகதர்ஷன்-

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்