ரணில் பிரதமரானதற்கு நானே காரணம்; தற்போதைய அமைச்சர்கள் பலர் இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் இருப்பவர்கள்: சரத் பொன்சேகா!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக வரமுடிந்தமைக்கு காரணம் நான் தான் என்ற பெருமையை எனக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை தொலைபேசியில் அழைத்து, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் சில நிபந்தனைகளை தான் விதித்துள்ளதாக அவர் கூறினார்.

“பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் எனக்கு ஆதரவளித்தால் மட்டுமே நான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று அவரிடம் கூறினேன். எனவே, அவர் பிரதமராக வருவதற்கு வழி வகுத்த பெருமையை விக்கிரமசிங்கே எனக்கு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

அத்துடன், தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 50% பாராளுமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்பவர்கள் எனவும் அதனால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15% பேர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலர் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். எனவே தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது,” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்