26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

மின்வெட்டு நேரத்தில் திருத்தம்: அமைச்சர் காஞ்சன!

தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேசேகர, தற்போது நாளாந்தம் மூன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், இன்று முதல் இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களாக மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய அட்டவணையின்படி மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கான பிரேரணையை அரசாங்கம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபைக்கு முன்வைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி,  ஒரு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடம் மின்வெட்டை விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடம் மின்வெட்டு விதிக்கப்படும்.

மின்வெட்டுகளை விதிப்பதன் மூலம் அரசாங்கம் தினசரி ரூ.400 மில்லியனைச் சேமிக்க முடியும், அது வழக்கமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய டீசலை நோக்கி செலுத்தப்படும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக ஒரு யூனிட் ஒன்றுக்கு 47.18 ரூபாவை இலங்கை மின்சார சபை மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டீசல் மற்றும் உலை எண்ணெய் a5மான மின் உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.67.15 செலவாகும் என்றும், சில சமயங்களில் டீசல் உற்பத்தி யூனிட் ஒன்றுக்கு ரூ.100ஐ தாண்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.

ஒரு யூனிட் ஒன்றுக்கு நீர் மின் உற்பத்தி மூலம் ரூ.4.17 என்ற குறைந்த செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒரு யூனிட்டுக்கு ரூ.16.69, நிலக்கரிக்கு ரூ.31.19 செலவாகும் என்று அமைச்சர் கூறினார்.

செப்டெம்பர் மாதம் வரை நாட்டில் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த மின்துறை அமைச்சர், அடுத்த வருடம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்ய இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, அது முழுமையான திருத்தம் ஆகாது எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் சிறப்பு ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Pagetamil

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

Leave a Comment