திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வறிய குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமைத்தாங்கும் குடும்பங்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வினியோகிக்க திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாரக் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வறிய குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் குடும்பத்திற்கு தலா ஒரு லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாரக் தெரிவித்தார்.
அந்தவகையில் வீட்டுத் தேவைக்காக இலவசமாக மண்ணெண்ணெய்யினை பெற தகுதியானவர்கள் மின்சார இணைப்பு வசதியற்ற குடும்பங்கள்,வறிய குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமைத்தாங்கும் குடும்பங்களுக்கு இவ்வாறு வீட்டுத் தேவைகளுக்காக தலா 01 லீற்றர் வீதம்் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்க குச்சவெளி பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக சபையின் தவிசாளர் ஏ.முபாரக் தெரிவித்தார்.
எனவே குறித்த பயனாளிகள் குச்சவெளி பிரதேச சபை அலுவலகத்திலும் சபையின் புல்மோட்டை உப அலுவலக தவிசாளர் காரியாலயத்திலும் தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து உங்களுக்காானபதிவு இலக்கங்களை இன்றே பெற்றுக்கொள்ளுமாறும் தவிசாளர் ஏ.முபாரக் கேட்டுக்கொணடதுடன்
மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கும் போது குடும்ப தலைவன்/தலைவி / அல்லது தகுதியான ஒருவர் வரலாம் எனவும் எக் காரணம் கொண்டும் சிறுபிள்ளைகள் வரக்கூடாது எனவும் மண்ணெண்ணை கொள்வனவிற்காக வருகை தரும் பயனாளிகள் கட்டாயம் தேசிய அடையாள அட்டை/ முதியோர் அடையாள அட்டை/அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்தை உறுதிபடுத்தக்கூடிய ஆவணத்தை கொண்டுவர வேண்டும் எனவும கட்டாயமாக மறக்காது மண்ணெண்ணையிணை பெற்றுக்கொள்வதற்கான தங்களுக்கான போத்தல் ஒன்றிணையும் கொண்டுவருமாறும் இதன்போது சபையின் தவிசாளர் ஏ.முுபாரக் கேட்டுக்கொண்டார்.
மேலும் இவ்வேலை திட்டத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச மண்ணெண்ணை வினியோகத் திட்டம முன்னெடுப்பதற்கான சகல வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முதல் கட்டமாக இன்றைய தினம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ் –