சுனைனா நடிக்கும் ரெஜினா என்ற திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் நீர்ப்பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுனைனா. இவர் தற்போது விஷாலுடன் லத்தி திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாள, தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. அந்தப் படத்தை மலையாளத்தில் வெளியான ‘பைப்பின் சுவத்திலே பிராணயம்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய டோமின் டி சில்வா இயக்குகிறார்.
இந்தப் படத்தின் முதல் பார்வையை பிரபல இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஆஷிக் அபு ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1