லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கவுள்ளதாக பரவும் தகவல்களை லிட்ரோ நிறுவனம் மறுத்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை (8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது.
கையில் போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




