Aeroflot விமான நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ருவிற்றர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை தற்போதைய அரசாங்கம் கையாளும் விதம் குறித்து தாம் மிகவும் வருத்தமடைவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
“சோவியத் காலத்தில் இருந்தே ரஷ்யா எங்கள் பழைய நண்பன். நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அந்த வரலாற்று உறவு மேலும் பலப்படுத்தப்பட்டது. ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளுக்கு தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தலாக செயற்படுகின்ற விதம் குறித்து இன்று நான் மிகவும் வருந்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
Russia is our old friend since the Soviet era. This historical relationship was further strengthened during my tenure as president. Today I'm deeply saddened by the actions of the present government that threaten our deep-rooted historical relationship. pic.twitter.com/ZK6WmG9vtc
— Maithripala Sirisena (@MaithripalaS) June 6, 2022
எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அஸ்பெஸ்டஸ் இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்த போது இலங்கை தேயிலையில் பூச்சியொன்று காணப்பட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இதனால் இலங்கை தேயிலை தொழில் நெருக்கடியை எதிர்கொண்டது.




