இலங்கை- அவுஸ்திரேலிய தொடரின் டிக்கெட் வருமானம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும்!

Date:

இலங்கை – அவுஸ்திரேலியா தொடரின் போது டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்காக விளையாட்டு அமைச்சிடம் ஒப்படைக்க இலங்கை கிரிக்கெட் முடிவு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியினரையும் அவர் பாராட்டினார்.

இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்துவது பொதுவாக நாட்டுக்கு உதவும் என்று குறிப்பிட்டார்.

ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச ரி20 போட்டியுடன் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்